கட்டுரை அமைக்கவேண்டிய முறை
- மொழி: தமிழ், ஆங்கிலம்
- எழுத்துரு: கட்டுரை A4 தாளில் 17 எழுத்து அளவு:1.5 இடைவெளிவிட்டு 8 முதல் 15 பக்கங்களுக்குள் விசயா (தமிழ்) டைம்சு நியூரோமன் ( ஆங்கிலம்) எழுத்துரு அளவு:12 கணினி தட்டச்சு செய்து சான்றெண் விளக்கங்களுடன் அமைத்தல் வேண்டும்.
- தலைப்பு: கட்டுரையாளர் பெயர், முகவரி, கட்டுரைத்தலைப்பு, ஆய்வுச் சுருக்கம், திறவுச்சொற்கள் (4-6) ஆகியவை தமிழிலும், ஆங்கிலத்திலும் இடம்பெற வேண்டும்.
- மேற்கோள்கள்/தரவுகள்: கட்டுரைக்குத் தொடர்புடைய மேற்கோள்கள் இடம்பெற வேண்டியது இன்றியமையாதது. தரவுகள் MLA முறையில் இடம்பெறவேண்டும். இணையதளத் தரவுகள் குறிப்பிடப்பெறல் வேண்டும்.
கட்டுரைத் தெரிவு/ வெளியீடு/ நிராகரிப்பு:
- கட்டுரை ஒவ்வொன்றும் மதிப்பாய்வின் அடிப்படையில் வெளியிடத் தெரிவு செய்யப்பெறும். தரமற்ற கட்டுரைகள் நிராகரிக்கப்படும். ஆசிரியரின் முடிவு இறுதியானது.
- இயற்கை, பசுமை நலன் கருதி இணைய வழியில் ஆய்விதழ் வெளியிடப்பெறும், சிறப்பிதழ்களும் இணைய வழியில் வெளியிடப்பெறும். ஆய்வாளர்கள் தரமான கட்டுரைகளை வெளியிட வாழ்த்துக்கள்.